சீனாவிலிருந்து புல்லட் புகையிரதம் பயணத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
புல்லட் புகையிரதம் சேவை லாவோஸ் நாட்டுக்கு, விரைவில் தொடங்கப்படவுள்ளது.
சீனாவில் இருந்து இந்த சேவை டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது
இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், வர்த்தக ரீதியாக பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
குன்மிங் நகரில் இருந்து, இயற்கை எழில்கொஞ்சும் இரு மலைகளுக்கு நடுவே பயணம் மேற்கொள்ளும் இந்த புல்லட் வேக புகையிரதம் , பூமிக்கடியிலும் பயணித்து லாவோஸ் நாட்டை அடையும்.
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த புகையிரதம் மூலம், சீனாவில் இருந்து லாவோஸ் நாட்டுக்கு, சுமார் ஆறரை மணி நேரத்தில் சென்றடையலாம் எனவும் கூறப்படுகிறது.
#world
Leave a comment