அரச செலவீனங்களை குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள பிரதான விடயங்கள்;
* அரச செலவீனங்களைக் குறைப்பற்காக புதிய அரச அலுவலங்கள் அமைப்பதற்கு இரண்டு வருடங்களுக்குத் தடை
* மின்சாரத் தேவையை சூாிய சக்தியை பெற்றுக்கொள்ளவும், அரச அலுவலங்களின் தொலைபேசி பாவைனையை 25 வீதம் குறைக்கவும் யோசனை முன்வைப்பு.
* அனைத்து அரச பணியாளா்களின் ஓய்வூதிய முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு, புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும்
* அரச சேவையின் பணியாளா்களது ஓய்வூதிய வயது 65 ஆக அதிகரிக்கப்படுகிறது.
* அனைத்து பாடசாலைகளுக்கும் நவீன இணைய வசதிகள் செய்துக்கொடுக்கப்படும்.
* விவசாயப் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், தேசிய விவசாயத்தை மேம்படுத்தவும் விசே வேலைத்திட்டம்.
* ஓய்வூதியம் பெறாத சிரேஸ்ட பிரஜைகளுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கிடூ.
* பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 10 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு
*அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது தொகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 5 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கீடு
* கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் பாதிப்புக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நிவாரணமாக 700 மில்லியன்
* கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் பாதிப்புக்குள்ளான மொத்த சிறு மத்திய வியாபாரங்களை மேற்கொள்வோர் நலன் கருதி 5000 மில்லியன் ஒதுக்கீடு
* பாடசாலை மூடப்பட்டத்தால் பாதிக்கப்பட்ட, பேருந்து, வான் உரிமையாளர்களுக்கு நிவாரணத்திற்கு 400 மில்லியன் ஒதுக்கீடு
* கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்காக, 1500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை உடனுக்குடன் அறிந்துகொள்ள www.tamilnaadi.com
#SrilankaNews
Leave a comment