பிரிட்டன் கோவாக்சினுக்கு அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினைச் செலுத்தியவர்கள் தன் நாட்டுக்குள் வரலாமென பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்தது.
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் பிரிட்டனுக்குள் வரலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்களிக்கப்படுமெனவும் பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
அத்தோடு சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பிரிட்டனுக்குள் நுழையலாமென பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது .
Leave a comment