Tractor
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உழவு இயந்திரத்திலிருந்து வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு!

Share

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த சிறுவன் ஒருவன் (வயது-5) உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் வவுனியா – ஓமந்தை பாலமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த கந்தலதன் கனிஸன் (வயது – 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த பகுதியில் காணப்படும் காணி உழவு இயந்திரத்தால் பண்படுத்தபட்டுள்ளது. அதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி காணி உரிமையாளரின் மகனையும், அவரது உறவினரது மகனையும் உழவியந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தை பண்படுத்தியுள்ளார்.

Tractor

இந்தநிலையில், சிறுவர்களில் ஒருவர் உழவு இயந்திரத்திலிருந்து தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ளான்.

சிறுவன் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முன்னாடியே உயிரிழந்து விட்டான் என
வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...