202201141538156246 Tamil News Bag with IEDlike object was found at Ghazipur flower market SECVPF
செய்திகள்இந்தியா

சந்தையில் வெடிகுண்டு மீட்பு! – விசாரணைகள் ஆரம்பம்

Share

இந்தியா – புதுடெல்லியின் எல்லைப்புர பகுதியில் அமைந்துள்ள காசிப்பூர் – மண்டி சந்தையில் அநாதரவாக காணப்பட்ட பை ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த சந்தை பூக்கள், காய்கறி, மீன் மட்டும் இறைச்சி என அனைத்தையும் கொண்டமைந்த சந்தைப் பகுதியாகும்.

இந்த நிலையில், குறித்த பை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் அந்த பை சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது குறித்த பையில் வெடிகுண்டு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரால் எவ்வித சொந்தமுமின்றி குண்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவியது.

வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் குறித்த சம்பவம் தொடர்பில் டெல்லி பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சிறிய அளவானது எனினும், இந்தியாவின் குடியரசு தின விழா வர உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டடமை பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...