பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் 4 வீரர்கள் பலியாகியதுடன் 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்.
ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ராணுவ வாகனம் சபர்பாஷ் பகுதியருகே வந்தபோது, சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டு இத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது
Leave a comment