சங்கானை மண்டியன் குளத்திற்கு உள்ளிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.
மாதகல்- யாழ்ப்பாணம் பிரயாண மார்க்கத்தின் பஸ் சாரதியும் உரிமையாளருமான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் குணபாலசிங்கம் கடம்பகுமார் வயது 42 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 ஆம் திகதி காணாமல் போயிருந்த குறித்த நபர், இன்று மதியம் கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment