நாடாளுமன்றில் எதிரொலித்த புலிகளின் தலைவரின் பிறந்தநாள்!

Parliament

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றிய போதே அவர் வாழ்த்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

போர் காலத்தின்போது கிபிர் விமானங்கள் வந்தால், தமிழ் மக்கள் எந்தளவு அஞ்சினார்களோ, அதேபோன்று இன்று மஹாவலி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது தமிழ் மக்கள் அச்சப்படுகிறார்கள்.

எனவே மஹாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் நிறுத்தப்படவேண்டும்.

மேலும் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சகல அத்தியாவசியப் பொருட்களும் இரசாயன உற்பத்திப் பொருட்களாகவே இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் தனிப்பட்டவர்களுக்கு இலாபம் தரும் திட்டங்களாகவே உள்ளது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version