நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டட வரவு செலவுத் திட்டமானது வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேலும் ஒரு கோடி ரூபாயை கடனாகப் பெற வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிவாயு உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளமை குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் வாழ்க்கைச் செலவு நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்திருத்தனர்.
பசில் ராஜபக்ஸ பாரிய புரட்சியை மேற்கொள்வதாகக் கூறிய போதிலும், வரவு செலவுத் திட்டத்தில் அவ்வாறான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
#SrilankaNews
Leave a comment