suma 720x375 1
செய்திகள்இலங்கை

லொஹானுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு! – ஆஜராகிறார் சுமந்திரன்

Share

தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித  உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடமிருந்து லொஹான் ரத்வத்தவின் குறித்த நடவடிக்கை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தற்போது குறித்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் எட்டு தமிழ்  அரசியல் கைதிகளால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் அரசியல் கைதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகவுள்ளார்.

இதேவேளை கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...