822273 1
இந்தியாசெய்திகள்

ஹோட்டல், உணவகங்களில் சேவைக் கட்டணத்துக்கு தடை!

Share

ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என இந்திய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவு கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டணம் அளிக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். அதை நுகர்வோரின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் ஆர்டர் செய்த உணவுடன் எந்த பெயரிலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்றும் சிசிபிஏ தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

இவ்விதம் வசூலிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் தேசிய நுகர்வோர் சேவை தொலைபேசி எண் 1915-ல் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரென்ட் குறித்து புகார் அளிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...

001
உலகம்செய்திகள்

சட்டம் தன் கடமையைச் செய்யும்! – சகோதரர் ஆண்ட்ரூ கைது குறித்து மன்னர் சார்லஸ் அதிரடி அறிக்கை!

பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தனது தம்பி ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் குறித்துப்...

image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...