court hammer
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை – விசாரணை நாளை!

Share

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை இடம்பெறவுள்ளது.

பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றிலும் சுன்னாகம், தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றிலும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இன்று நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதிவரை இந்த தடை உத்தரவு வழங்குமாறு பொலிஸாரினால் கோரப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளோர் மன்றில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் மீது, நாளை திங்கட்கிழமை கட்டளை பிறப்பிப்பதாக குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதியளித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், தடை உத்தரவு கட்டளையை நேற்றுமுன்தினம் வழங்கியிருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...