வெளிநாட்டு நாணயத்துக்கு தடை – தலிபான்கள் அதிரடி

Taliban Afghanistan 3

தலிபான்களால் வெளிநாட்டு நாணயத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர்.

தலிபான்களின் இடைக்கால அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்காத நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும் ஆதரவு வழங்கியுள்ளன.

இந்நிலையில், தலிபான்களால் ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நாட்டில் ஆப்கானியர்கள் அனைவரும் தங்கள் வர்த்தகத்தில் ஆப்கானிய நாணயத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் சந்தைகளில் பரவலாக அமெரிக்க டொலர் பாவனை அதிகமாக காணப்படுவதுடன் பாகிஸ்தான் உட்பட அயல் நாடுகளின் நாணயமும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையிலேயே

இதேவேளை, ஆப்கான் அரசை அங்கீகரிக்க தவறின், ஆப்கானிஸ்தானில் அமைதியற்ற சூழ்நிலை உருவாக வெறுப்பாக அமையும் எனவும், இந்த நிலை உலகிற்கே ஆபத்தாக மாறும் எனவும் அமெரிக்க அரசுக்கு தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#World

 

Exit mobile version