aryan khan
செய்திகள்இந்தியாசினிமா

ஷாருக்கானின் மகனுக்குப் பிணை: விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இதோ!

Share

மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பொலிவுட் நடிகர் ஷாருகானின் மகன், ஆர்யன் கான் இன்று (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு நேற்று முன்தினம் (28) மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏறத்தாழ 27 நாட்களுக்கு பின்னர் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், வெளிநாடு செல்வதெனில் நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்றும், விசாரணைக்கு அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...