சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுமாறும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம், சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர்.
டிசெம்பர் மாதமென்பதால் பலரும் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்லும் நிலைமை அதிகரித்துள்ளது. அதேபோல நத்தார் பண்டிகைகால வியாபாரமும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர் பகுதிகளிலும், பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு, தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
#SriLankaNews