அரச பங்காளிக்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசில் உள்ள 11 பங்காளிக்கட்சிகளும் இணைந்தே செயற்பட்டன. இனியும் அவ்வாறே செயற்படுவோம். இதில் தடையேதும் இல்லை.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் எமது கவலையை ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தினோம். அதற்கு தமது தரப்பு நியாயத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
11 கட்சிகளில் இருந்து சுதந்திரக்கட்சி வெளியேறிவிடும் என சிலர் நினைக்கின்றனர். அவ்வாறு நடக்காது. பங்காளிக்கட்கிகளின் பயணம் தொடரும்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment