Arrested 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உண்டியல் மூலமாக போலி யூரோ நாணயத்தாளை, மாற்றும் முயற்சி முறியடிப்பு!-

Share

ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான போலி நாணயத்தாளுடன் இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளை தேடுதலின்போதே
குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான ஆணும், 45 வயதான பெண்ணும் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் உண்டியல் மூலமாக இந்த போலி யூரோ நாணயத்தாளை, இலங்கை நாணயமாக வேறு தரப்பினருக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் இயங்கும் பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மூலம் இந்த போலி யூரோ நாணயத்தாள் பெறப்பட்டுள்ளதாக சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...