சாவகச்சேரி நகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தபால் நிலைய வீதியில் இச்சம்பவம் நேற்று (07) இடம் பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சாவகச்சேரி தபால் நிலைய வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நகரசபை உறுப்பினர், தபால் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளை திருப்பிய வேளையில், அவருக்கு பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில், விபத்துக்குள்ளானது.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் நகரசபை உறுப்பினர் மீது நடு வீதியில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், இரண்டாயிரம் ரூபா பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார்.
இதில், வெள்ளாம்போக்கட்டி கொடிகாமத்தில் வசித்து வரும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினரான 72வயதுடைய க.வேலாயுதபிள்ளை என்பவரே தாக்குதலுக்கு உள்ளானார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment