எமது மக்கள் சக்தி (கொடி சின்னம்) கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரரை நீக்குவதற்கு அக் கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமை, கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் வாய்ப்புக்கு தன்னிச்சையான முறையில் தனது பெயரை பரிந்துரைத்துக்கொண்டமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்படவுள்ளது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அத்துரெலிய ரத்தன தேரரை, நீக்கிவிட்டு, கலபொட அத்தே ஞானசார தேரரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கிய எமது மக்கள் சக்திக்கு தேசியப்பட்டியல் ஊடாக ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment