நிர்வாகத்துறையில் இராணுவ அதிகாரிகள் – சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும்!!
நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
அவருடைய இல்லத்தில் ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி பதவி சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லுமென்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவது நல்லதுதான்.
அதேவேளை நாட்டின் அனைத்துத்துறைகளிலும், குறிப்பாக நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் என்கிறார்.
Leave a comment