நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்
1. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
2. மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
3. பிரிகேடியர் லிடர்
4. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
5. குர்சேவர் சிங்
6. ஜிஜேந்தர் குமார்
7. விவேக் குமார்
8. சார் தேஜா
9. கவில்தார் சத்பால்
மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. சம்பவ இடத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்தி வருகின்றனர்
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு, விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
#IndiaNews
Leave a comment