IMG 20220207 WA0046
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வரணியில் அதிரடிப் படையினர் தாக்குதல்! – இருவர் காயம்

Share

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாக தெரிவித்தே தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட விசேட அதிரடிப படையினரை கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார், இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் ச.இளங்கோவன் பிணையில் விடுவித்துள்ளார்.

IMG 20220207 WA0044 IMG 20220207 WA0048 IMG 20220207 WA0045 IMG 20220207 WA0049

IMG 20220207 WA0043#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...