பல்கலைக் கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து, பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடையே கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல், அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளது.
தற்போதைய நிலைமையில், பல்கலைக் கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக் கழகங்களைத் திறப்பது குறித்தும், இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, முதலில் ஆரம்பிப்பது தொடர்பில் அதிக கவனம் செலத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
#SrilankaNews