இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் விரைவில் பெயரிடப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் மரணடைந்த பின்னர், இன்னும் அக்கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் பொதுச்செயலாளராக செயற்படுகின்றார். தொண்டமானின் மருகமனான செந்தில் தொண்டமான், உப தலைவராக செயற்படுகின்றார்.
தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் அண்மைக்காலமாக மோதல் நிலைமை இருந்து வந்தது. தலைமைப்பதவிக்கு மும்முனை போட்டி நிலவிவந்தது. இப்போட்டியை தவிர்ப்பதற்காக புதிய தலைவர் பெயரிடப்படலாம் எனவும், கட்சி தலைவருக்கான அதிகாரங்களை பொதுச்செயலாளருக்கு வழங்கும் வகையில் யாப்பு மாற்றப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
Leave a comment