திடீரென எதுவும் நடக்கலாம்- மின்சார சபை தொழிற்சங்கங்கள்

Pg 13 Arrr

keravapitiya

எதிர்காலத்தில் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடலாம் என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பில் தாம் ஈடுபட்டால் பொதுமக்கள் அசௌகரியத்தை எதிர்கொள்வார்கள். ஆகையினால் அறிவித்தல் வழங்காது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த உடன்படிக்கையை அரசாங்கத்தினால் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படாவிட்டால், பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version