நாட்டில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
2021 தொடக்கத்தில் இருந்து மொத்தமாக 5275 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 706 பேரும், காலி மாவட்டத்தில் 643 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 600 பேரும், கேகாலை மாவட்டத்தில் 418 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த நோயாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளார்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment