இலங்கை வந்த மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள்!

Pfizer

நெதர்லாந்திலிருந்து கட்டார் ஊடாக மேலும் 608,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது

பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் வயோதிபர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் கோரப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இம் மாத ஆரம்பத்தில் கிடைக்கப்பெற்ற நிலையில், ஏனைய 4 மில்லியன் தடுப்பூசிகளில் முதலாவது தொகுதியாக நேற்றைய தினம் 608,000 தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

அதன் இரண்டாவது தொகுதியாக இன்றைய தினமும் 608,000 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version