மேலும் 106 பேருக்கு சாவகச்சேரியில் தொற்று!

corona death2

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 106 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று 103 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 25 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

சாவகச்சேரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கைதடி அரச முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியவர்கள், பணியாளர்கள் என 156 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 68 முதியவர்களுக்கும், 4 பணியாளர்களுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version