வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி அபாயம்: 1,15,000-க்கும் அதிகமான வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது!

25 68f364cea45aa

சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD, வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, 1,15,000-க்கும் அதிகமான டாங்க் (Tang) மற்றும் யுவான் புரோ (Yuan Pro) வகை மின்சார வாகனங்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறவுள்ளதாகச் சீனச் சந்தை ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்று (அக்டோபர் 19) அறிவித்துள்ளது.

2015 மார்ச் முதல் 2017 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட 44,535 டாங்க் (Tang) ரக வாகனங்கள்.
2021 பிப்ரவரி முதல் 2022 ஆகஸ்ட் வரை தயாரிக்கப்பட்ட 71,248 யுவான் புரோ (Yuan Pro) ரக மின்சார வாகனங்கள்.

இந்த வாகனங்களில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்வதற்காக, BYD நிறுவனம் தனது அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் மூலம் மென்பொருள் மற்றும் பாகங்களை மேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 6,843 ஃபங் சென்பாவோ பாவ் 5 (Fangchengbao Bao 5) பிளக்-இன் ஹைபிரிட் SUV-களையும், செப்டம்பர் 2024 இல் சுமார் 97,000 டொல்பின் (Dolphin) மற்றும் யுவான் பிளஸ் (Yuan Plus) மின்சார வாகனங்களையும் இந்த நிறுவனம் திரும்பப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உலகளவில் தனது கார்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அதன் தரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்துவதில் BYD தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Exit mobile version