ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். உடன் சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் வெகுவிரைவில் அறிமுகமாவுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் ஜனவரி 2022 ல் அறிமுகமாகும் என சாம்சங் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விவரங்கள் சமீபத்தில் சாம்சங் சர்வெரில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த ஒன் யு.ஐ. 4 கொண்டிருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 வரையிலான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
சாம்சங் தனது பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மூன்று ஓ.எஸ். அப்டேட் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் முந்தைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இதன் விலை 660 யூரோக்கள் மற்றும் 705 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கான முன்பதிவு குறித்து இதுவரை அந்நிறுவனத்தால் தகவல் ஒன்றும் வெளியிடப்படவில்லை.
#technology