காற்றழுத்தம் கரையைக் கடக்கின்றது!

rain 01 1621406254

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், சிட்ரங் புயலாக வலுவடைந்ததை அடுத்து, வங்காளதேசத்தில் இன்று கரையை கடந்துள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வந்த 28,155 மக்களும் 2,736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதற்காக 576 முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காக்ஸ் பஜார் துணை ஆணையர் மாமுனூர் ரஷீத் தெரிவித்தார். தேவைப்பட்டால், கல்வி நிறுவனங்கள் தங்குமிடங்களாகப் பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டன.

இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிட்ரங் புயல் காரணமாக மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்துள்ளது என்றும் தேவையில்லாமல் வெளியில் செல்வதையோ அல்லது கடல் பகுதிகளுக்கு செல்வதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்பார்த்ததை விட வேகமாக, நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கடந்தது. இதன் எதிரொலியால், வங்கதேசத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவின் 4 வட கிழக்கு மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#Indianews

Exit mobile version