சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு வலியுறுத்தி ஜெனிவாவில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் பங்கேற்றனர்.
” ரஞ்சன் ராமநாயக்க கொலை செய்யவில்லை. கொள்ளையில் ஈடுபடவில்லை. தவறுதலாக நீதிமன்றத்தை விமர்சித்ததால் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. எனவே, அவரை விடுவிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கான பொதுமன்னிப்பை வழங்க வேண்டும்.”- என போராட்டத்தில் பங்கேற்ற இலங்கையர்கள் தெரிவித்தனர்.
#SrilankaNews
Leave a comment