மார்ச் 5 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், அமெரிக்கா மனம் வைத்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் போரைத் தடுத்திருக்கலாம். நேட்டோ கட்டமைப்புக்குள் உக்ரைன் உள்வாங்கப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கிருந்தால், ரஷ்யா மாற்று நடவடிக்கையில் இறங்கியிருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
#SriLankaNews