நாடாளுமன்றில் அமளி: எம்.பி மீது தாக்குதல் முயற்சி (வீடியோ)

MP attack

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று (23) கூடிய போது, அமளியான நிலைமை ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய விடயங்களை வைத்து உரையாற்றியிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியின் மீது சபைக்குள் வைத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியை தாக்குவதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் முயற்சித்தமையினால் இந்தநிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, குட்டியாராச்சி எம்.பியை தாக்குவதற்கு முயற்சித்தபோது மேலும் சில எம்.பிக்கள் அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியமை தொடர்பில் சபாநாயகர் அவரை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


#SrilankaNews

Exit mobile version