தமக்கு ஏற்ற ஆடைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேற்படி தெரிவித்துள்ளார்.
கொரோனாப் பரவல் காரணமாக நீண்ட காலம் அமுல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்துக்குப் பின்னர், தற்போது பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடை ஆகியவற்றை வாங்க முடியாத மாணவர்களின் நன்மை கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாளை முதல், 200க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட அனைத்து பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews