மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி ! – முல்லை. நீதிமன்று அதிரடி

mullai

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து தீர்ப்பளித்துள்ளது முல்லைத்தீவு நீதிமன்றம்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை உத்தரவுக்கு எதிராக இன்று காலை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து குறித்த தீர்ப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

“இறந்தவர்களை நினைவுகூருவது மனித பண்பு. நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்றாலும், குறித்த அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவுகூரலாம்” என தெரிவித்த நீதிபதி ஏற்கனவே வழங்கப்பட்ட தடை உத்தரவை மாற்றியமைத்து கட்டளையிட்டார்.

குறித்த நகர்த்தல் பத்திரத்திர விசாரணை வழக்கில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், வி.எஸ்.தனஞ்சயன், கணேஸ்வரன், ருசிகா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள, முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தால், கடந்த 17ஆம் திகதி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version