கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதியுதவி செய்த குற்றச்சாட்டு! – வர்த்தகருக்கு விளக்கமறியல்!

rrrr

லங்கா சதொச நிறுவனத்துக்குரிய வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேலியாகொட பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் 54,000 கிலோகிராம் வெள்ளைப்பூடு உள்ளடக்கப்பட்ட கொள்கலன்களே வெளியேற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இந்த மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார் என வெலிசர நீதவான் நீதிபதி ஹேசாந்த டீ மெல் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபரின் மேல் தகவல்களை மறைத்தல், சட்டவிரோதமாக பொருள்களை விடுவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version