புகையிரத்துடன் மோதுண்டு வான் விபத்து!

Accident 3

வான் ஒன்று புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொட – கந்தேகொட பகுதியில் இச்சம்பவம் இன்று (28) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

புகையிரத கடவையில் உள்ள சமிக்ஞை விளக்கு ஒளிர்ந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் வானைச் செலுத்தியமையின் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்த வானின் சாரதி சிகிச்சைகளுக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version