3 4
இந்தியாசெய்திகள்

அணில்’ஸ் இன்னும் அழுதுட்டு இருக்காங்க.. அடிச்ச அடி அப்படி! ஓவியாவின் அடுத்த சம்பவம்

Share

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட பரப்புரையின் போது  திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்  வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் நடிகர்கள் வரை பலரும்  விஜயையும் அவருடைய கட்சியையும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்து ஒரு சில மணி நேரங்களிலேயே நடிகை ஓவியா  விஜயை கைது செய்ய வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு ஆனது இணையத்தில் வேகமாக பரவியது  இவருடைய பதவுக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின.

இது விஜய் ரசிகர்களிடையே  கொதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஓவியாவை மோசமாகவும் நாகரிகம் அற்ற வார்த்தைகளாலும் திட்டினர்.  அதனையும் ஓவியா ஸ்கிரீன்ஷாட் எடுத்து  தனது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த நிலையில், விஜய்யும் அவரது  கட்சியினரையும்  தாக்கும் வகையில் மீண்டும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை ஓவியா.  அதில்  அவர் போட்ட கேப்ஷன் விஜய் ரசிகர்களை மேலும் கொந்தளிக்க செய்துள்ளது.  தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...