goatha 1707921963
இந்தியாசெய்திகள்

அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி.., பாஜகவில் இருந்து விலகிய நிலையில் திடீர் முடிவு

Share

அதிமுகவில் இணைந்தார் நடிகை கௌதமி.., பாஜகவில் இருந்து விலகிய நிலையில் திடீர் முடிவு

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜகவில் உள்ள அழகப்பன் தனது சொத்துக்களை ஏமாற்றியதற்கு, அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், கட்சியில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இல்லை என்றும் கௌதமி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், கடந்த ஓக்டோபர் மாதம் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அண்மையில், பாஜகவில் இருந்து விலகியிருந்த நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...