இலங்கையில் நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ள நடிகை

tamilni Recovered 3

இலங்கையில் நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ள நடிகை

இலங்கையில் நல்லூர் கோவிலுக்கு சென்றுள்ள நடிகைநடிகை ஆண்ட்ரியா பாடகியாக அந்தியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடலின் மூலம் அறிமுகமானார்.

அப்படியே 2007ம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கிய ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்தார்.

வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்தும் புதிய படங்களும் நடிக்கிறார், அதிக இசைக் கச்சேரிகளிலும் பாடி வருகிறார்.

அண்மையில் நடிகை ஆண்ட்ரியா இலங்கை சென்றுள்ளார். அங்கு பிரபலமான நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவரே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version