யாழ்ப்பாணம் – வசந்தபுரம் பகுதியில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேங்கி இருக்கும் வெள்ள நீரினை அகற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று மதியம் வசந்தபுரம் கிராமத்தில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்றது.
குறித்த பகுதிக்கு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment