2022 நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பை புறக்கணித்த ஆளுங்கட்சி எம்.பி. விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர், பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது. அதற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன. 60 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. 11 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்களில் மூவர் ஆளுங்கட்சியினர். இதில் இருவர் முன்கூட்டியே சமூகமளிக்கமாட்டோம் என்பதை அறிவித்துள்ளனர். எனினும், விஜயதாச ராஜபக்ச வாக்கெடுப்பை புறக்கணித்தார்.
எனவே, இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews

