கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி

மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!

மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!

கீழே விழுந்து இறந்த நபருக்கு கொரோனா உறுதி

காய்ச்சல் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் வைத்தியசாலையில் தனது விபரங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (23) நடைபெற்றுள்ளது.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனை சென்ற குறித்த நபருடைய உடல்நிலையை அவதானித்த வைத்தியசாலை ஊழியர்கள் அவரை வவுனியா ஆதார வைத்தியசாலை செல்லுமாறு வலியுறுத்தவே அவர் அங்கு சென்ற வேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த 55 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

 

Exit mobile version