இந்தியாவில் சிறார்களுக்கும் நாய்களுக்கும் திருமணம் நடைபெற்ற வினோத நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஒடிசாவில் பந்த்சாஹி என்ற பழங்குடியின கிராமத்தில், காலங்காலமாக, சிறார்களுக்கும், நாய்களுக்கும் இடையே திருமணம் நடக்கும் நிகழ்வு நடந்து வருகிறது.
அண்மையில் 11 வயது சிறுவன் தபன் சிங்குக்கும், பெண் நாய்க்கும் பழங்குடியின மரபுகளின்படி திருமணம் நடந்துள்ளது.
இதே போல், 7 வயது சிறுமி லட்சுமிக்கும், ஆண் நாய்க்கும் திருமணம் நடந்து உள்ளது.
குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின் இப்படி திருமணம் செய்வதால், அவர்களிடம் இருந்து தீயசக்திகள் விலகி, நாய்க்கு சென்று விடும் என அக்கிராம மக்கள் நம்புகின்றனர்.
இந்த இரண்டு திருமணங்களும் உள்ளூர் சடங்குபடி, சமூக விருந்துடன் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
#world