நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரன்சம் ராமநாயக்க, ஒரு சமூக சேவகர், ஒரு நடிகர்,ஒரு அரசியல்வாதி, இந்த நாட்டின் சாதாரண மக்களுக்காக உண்மையான அர்ப்பணிப்புள்ளவர், தனது செல்வத்தை அப்பாவி மக்களின் நலனுக்காக செலவிடுபவர்.
ரஞ்சன் ராமநாயக்க தீவிரமற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருப்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். கடுமையான குற்றம் புரிந்தது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிலரை நீங்கள் இரக்கத்தால் விடுவிப்பவர்,
எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தயவுசெய்து மன்னிப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment