OIF 3
இந்தியாசெய்திகள்

கால்வாயில் சடலமாக கிடந்த 27 வயது பெண் மாடல்!

Share

இந்திய மாநிலம் ஹரியானாவில் இளம் பெண் மொடல் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் உள்ள ஹொட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங். இவருக்கும் மொடல் பெண்ணான திவ்யா பகுஜாவிற்கும் இடையே உறவு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். ஆனால், திவ்யா அதை வீடியோவாக எடுத்து அபிஜீத்தை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி, ஹொட்டலில் வைத்து திவ்யா கொலை செய்யப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஹரியானாவின் தோஹானாவில் உள்ள பக்ரா கால்வாயில் திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

குர்கான் பொலிஸார் கூறும்போது, பஞ்சாபின் மூனாக் பகுதியில் உள்ள கால்வாயில் திவ்யாவின் சடலம் வீசப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் நடத்திய விசாரணையில், Hisarயில் உள்ள குருத்வாரா சாலையில் வசிக்கும் ரவி ரங்கா, பால்ராஜ் கில் ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

அத்துடன் அபிஜீத் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான ரவி பங்கா தலைமறைவானார். அவரை தேடும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

Share
தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...