பதுக்கி வைக்கப்பட்ட 650 தொன் சீனி மீட்பு!

sugar 1

சீதுவ பகுதியில் இரண்டு களஞ்சியசாலைகளிலிருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் கிலோ கிராம் (650 தொன்) சீனியை நுகர்வோர் விவகார அதிகாரசபை கைப்பற்றியுள்ளது.

குறித்த தொகை சீனி நுகர்வோர் விவகார அதிகாரசபையில் பதிவு செய்யப்படாமல் களஞ்சியசாலையில் சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை ரகசிய பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் குறித்த இரண்டு களஞ்சியசாலைகளும் சோதனையிடப்பட்டன. இதன்போதே குறித்த தொகை சீனி கைப்பட்டப்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு களஞ்சியசாலைகளின் முகாமையாளர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version