money 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ATM மூலம் 6 லட்சம் திருட்டு! – சந்தேக நபர்களுக்கு யாழ் பொலிஸார் வலைவீச்சு

Share

ATM அட்டையை எடுத்து பணத்தை கொள்ளையிட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

தனியாள் ஒருவரின் ATM அட்டையை எடுத்த இருவரும் அதனை பயன்படுத்தி 6 லட்சம் ரூபாவை கொள்ளையிட்டுள்ளனர்.

ஊம்பிராயில் வசிக்கும் ஒருவரின் ATM அட்டை காணாமற்போன நிலையில், அவரது குறித்த அட்டையிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபா மீளப்பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் வாங்கி சென்று விசாரித்த அவர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் வங்கி உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தொடர்பான ஒளிப்படங்களை பெற்றுள்ளனர்.

“குறித்த சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ளன. சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்கள் உதவி தேவைப்படுகிறது. குறித்த இருவர் தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591329 என்ற தொலைபேசி இயக்கத்துக்கு அழைத்து தகவலை வழங்குங்கள்”

இவ்வாறு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பழிகக்கார பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

656 2 1 656 1 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...