கைது
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட அறுவர் மாட்டினர்!

Share

பலாங்கொடை, நொன்பேரியல் இயற்கை வனத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த 6 பேரை நொன்பேரியல் வனப்பாதுகாப்பு காரியாலய அதிகாரிகள் நேற்று கைதுசெய்துள்ளனர்.

இவ்வனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வழமையான‌ பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது இவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இவர்கள் உடனே மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இவ்வனத்தில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வுகள், காடழிப்பு, வேட்டையாடுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருவதால் இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...

17 3
இலங்கைஅரசியல்செய்திகள்

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: பொருளாதாரப் பாதிப்புகளைத் தடுக்க ஜனாதிபதி அநுர தலைமையில் அவசரத் திட்டம்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சவாலாக ஏற்று, அனைத்து அரச துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது...